2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

கினலன் தோட்ட மக்கள் தீர்வு கோரிக் வேலைநிறுத்தம்

Editorial   / 2020 மார்ச் 11 , பி.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்
 

தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்கவேண்டும் என வலியுறுத்தி, எல்ல பிரதேச செயலகத்துக்குட்பட்ட கினலன் தோட்ட மக்கள், இன்று (11) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கினலன்  தோட்டத்தில் பறிக்கப்படும் தேயிலைகள், பிற தொழிற்சாலைகளுக்குக் ​கொண்டுச் செல்லப்படுவதாகவும் அத்துடன், மாதாந்தம் அறவிடப்படும் கோவில் கட்டணம், தோட்டத்துக்கு இன்னும் வழங்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுமே, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இத் தோட்டத்திலுள்ள தொழிற்சாலை இயங்கும் நிலையிலேயே இருப்பதாகவும் எனினும், அவை வேறொரு தொழிற்சாலைக்குக் கொண்டு சென்று அரைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், வெளியிடங்களில் இருந்து இந்தத் தோட்டத் தொழிற்சாலைக்கு கொழுந்துகள் கொண்டு வரப்படுவதாகவும் இதன் பின்னணி தங்களுக்கு புரியாமல் உள்ளமையாமல், தொழில் புரிவதில் சிக்கல் ஏற்படுவதாகவும் தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், கோவிலுக்கான கட்டணமாக, மாதாந்தம் 500 ரூபாய் அறவிடப்பட்டு வந்ததாகவும் எனினும், கடந்த 3 மாதகாலமாக, அந்தக் கொடுப்பனவு, நிர்வாகத்தால் கோவிலுக்கு வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சம்பவ இடத்துக்கு வருகை தந்த இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வடிவேல் சுரேஷ், தோட்டத் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்கையில் ஈடுபட்டார்.

இதன்பின்னர், குறித்தத் தோட்டத்தில் பறிக்கப்படும் கொழுந்துகள், அந்த தொழிற்சாலையிலேயே நாளை (12) முதல் அரைக்கப்டும் என்றும் 25ஆம் திகதிக்கு முன்னர், உரிய பணம் கோவிலுக்குச் செலுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X