2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

காட்டுக்குப் போக வேண்டாம்: மீறினால் சட்டநடவடிக்கை

Kogilavani   / 2016 டிசெம்பர் 21 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

சிவனொளிபாத மலைக்கு வரும் யாத்திரிகர்கள், வனப்பகுதிகளைப் பார்வையிடச் செல்வதை தவிர்க்குமாறும், மீறிச் செல்வோர் மீது சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், மஸ்கெலியாப் பொலிஸார் தெரிவித்தனர்.

நோட்டன் சப்த கன்னியர் மலை, நல்லத்தண்ணி ஹெமில்டன் வனப்பகுதிகளை பார்வையிடச் சென்ற இரு குழுக்கள், அண்மையில் காணாமல் போனதுடன், மிகுந்த பிரயத்தனத்தின் மத்தியில் இவர்கள் மீட்கப்பட்டனர்.

காட்டைச் சுற்றிப்பார்க்கச் செல்பவர்களால், காடுகளில் வாழும் யானை, சிறுத்தை போன்ற உயிரினங்கள், குடியிருப்புப் பகுதிகளை நோக்கி வரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனை கருத்திற்கொண்டே, மேற்படி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. வனப்பகுதிகளுக்கு உட்பிரவேசிக்கும் பாதை வழிகளில், அறிவித்தல் பதாதைகளை வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அறிவித்தலையும் மீறி, வனப் பகுதிகளுக்கு உட்பிரவேசிப்போர் மீது, சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என, பொலிஸார் மேலும் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--