2021 மே 12, புதன்கிழமை

சப்ரகமுவ மாகாணத்தில் 202 பட்டதாரிகளுக்கு ஆசியர் நியமனம்

Sudharshini   / 2015 நவம்பர் 16 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

சப்ரகமுவ மாகாணத்தில் மேலும் 202 பட்டதாரிகளுக்கு ஆசியர் நியமனம் விரைவில் வழங்கப்படவுள்ளதாக சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சில் இன்று (16) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனை கூறினார்.

இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,'2014ஆம் ஆண்டு இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளின் படி பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் பெறப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவர்.

இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் உள்ள 29 பிரதேச செயலகப் பிரிவுகளில் மிகவும் பின்தங்கிய கஷ்டப் பிரதேச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காகவே  மேற்படி பட்டதாரி ஆசியர்கள் அப்பாடசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளனர்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .