2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

சுயேட்சைக் குழு மாத்தளையில் வேட்புமனுத் தாக்கல்

Editorial   / 2020 மார்ச் 12 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மஹேஷ் கீர்த்திரத்ன

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், மாத்தளை மாவட்டத்தில் போட்டியிடவுள்ள சுயேட்சைக் குழுவொன்று, தமது வேட்புமனுவை, மாத்தளை மாவட்டத் தெரிவத்தாட்சி அதிகாரி கருணாசிறி பெரேராவிடம் இன்று (12) கையளித்துள்ளனர்.

இதன்பிரகாரம், இரத்நாயக்க முதியன்ஸலாகே சமிந்த சஞ்சீவ, நாகசூரியகுமார பட்டபெந்திகே அனுஷ்கா சுசிலா பெரேரா, வணிகசேகர வாசல முதியன்ஸலாகே அநுர சமந்த பண்டார, மிரிஸ்ஸ லங்காகே மேனகா தினுக்ஸி, வர்ணகுலசூரியலொவி டெக்லா ஷெரின், வீரதுங்க ரந்திக லில், உபாசக லியனகே ஜகத் கித்சிறி, கச்சுகடுகே சரித் சாரங்க ஆகிய வேட்பாளர்களே, சுயேட்சைக் குழுவில் ​வேட்பாளர்களாகக் களமிறங்கவுள்ளனர்.

இதுவரை 2 சுயேட்சைக் குழுக்களைச் சேர்ந்த இருவர், மாத்தளை மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதுடன், முதலாவது சுயேட்சை குழு வேட்புமனுவைக் கையளித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .