2025 ஜூலை 12, சனிக்கிழமை

சிறைச்சாலை பஸ் மோதியதில் ஒருவர் காயம்

Kogilavani   / 2017 ஜூன் 06 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெல்லவாயவிலிருந்து மொனராகலை சிறைச்சாலைக்கு பயணித்த சிறைச்சாலை பஸ்ஸானது, வீதியை கடக்க முற்பட்ட நபர் மீது மோதியதில், குறித்த நபர் படுகாயமடைந்த நிலையில் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற இவ்விபத்தில், வெல்லவாய, ஆனபல்லம மூன்றாம் மைல்கல் பிரதேசத்தைச் சேர்ந்த அல்விஸ் என்பவரே, படுகாயமடைந்துள்ளார்.

கட்டுப்பாட்டை மீறி, மிக வேகமாக பயணித்த குறித்த பஸ், கொடவேஹெரகலவில் வீதியை கடக்க முற்பட்ட நபர் மீது மோதியுள்ளதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .