2021 ஜனவரி 16, சனிக்கிழமை

திகாம்பரம் தலைமையில் 24ஆம் திகதி கூட்டம்

Editorial   / 2019 நவம்பர் 21 , பி.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எம்.கிருஸ்ணா

தொழிலாளர் தேசிய சங்கம், தொழிலாளர் தேசிய முன்னணியின் கூட்டம், இம்மாதம் 24ஆம் திகதி காலை 10 மணிக்கு, ஹட்டன் டி.கே. டபிள்யூ கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

தொழிலாளர் தேசிய சங்கம், முன்னணியின் தலைவர் பழனி திகாம்பரம் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு நன்றி கூறும் உரையும் முன்னணியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கவுள்ளது

இக்கூட்டத்தில், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் பிலிப், தேசிய அமைப்பாளர் ஜி.நகுலேஸ்வரன், முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் அமைப்பாளர்கள், மாவட்ட தலைவர்கள், தோட்ட தலைவர்கள்,  தலைவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .