Kogilavani / 2016 மார்ச் 18 , மு.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன், ஆர்.ரமேஷ், கு.புஸ்பராஜ்
நுவரெலியா குதிரைப்பந்தய திடலில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்' எனக் கோரி, அங்கு பணிபுரியும் தொழிலாளர்களும் குதிரை ஒட்டுநர்களும் நேற்று வியாழக்கிழமை (17), நுவரெலியா-பதுளை பிரதான வீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நுவரெலியா குதிரைப்பந்தய திடலை, பல வருடங்களாக நிர்வகித்து வந்த நிர்வாகத்தினர், அதனை அபிவிருத்தி செய்வதற்கு எந்தவொரு வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை. தற்போது குதிரைப்பந்தய திடலை பொறுப்பேற்றுள்ள நிர்வாகத்தினர், பல கோடி ரூபாய்களை முதலீடு செய்து அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த அபிவிருத்தி பணிகளை இடைநிறுத்தும் நோக்கில், கடந்த காலங்களில் இந்த இடத்தை நிர்வகித்தவர்கள் செயற்பட்டு வருவதாகவும் அதனை நிறுத்துமாறு கோரியுமே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்கள், 'கடந்த நிர்வாகம், தொழிலாளர்களின் மாதாந்த வேதனம், மேலதிக கொடுப்பனவுகள், தொழிலாளர்களின் நலன்சார் அபிவிருத்திகள் ஏனைய தேவைகள் தொடர்பாக எந்தவிதமான காத்திரமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. இதனால் தொழிலாளர்கள் பெரும் விரக்தியின் மத்தியிலேயே குறித்த இடத்தில் பணியாற்றி வந்தனர்'எனக் கூறினர்.
'புதிய நிர்வாகம் அபிவிருத்தி உட்பட தொழிலாளர்களின் நலன்சார் விடயங்களிலும் கவனம் செலுத்தி வருகின்றதாலேயே இந்த இடையூறு விளைவிக்கப்படுகின்றது' என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் 100 வருடங்களாக, வீடமைப்பு வசதி இல்லாது வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago