2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு

Niroshini   / 2016 ஜூலை 18 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

வரையாறுக்கப்பட்ட கல்வி சேவை ஊழியர்களின் கூட்டுறவு சிக்கன கடனுதவிச் சங்கத்தின் ஏற்பாட்டில், சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் 2013 – 2014 ஆண்டுகளில் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட 217 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு, நேற்று(17) இரத்தினபுரி சீவலி மத்திய மகா வித்தியாலய கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

பல்கலைகழகத்துக்கு தெரிவுசெய்யப்பட்ட ஒரு மாணவருக்கு பத்தாயிரம் ரூபாய் வீதம் புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில்,  இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான மஹிந்த ஜயசிங்க பிரதம அதிதியாகவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவரும் வரையாறுக்கப்பட்ட கல்வி சேவை ஊழியர்களின் கூட்டுறவு சிக்கன கடனுதவிச் சங்கத்தின் அகில இலங்கை உப தலைவருமான சுந்தரலிங்கம் பிரதீப், வரையறுக்கப்பட்ட கல்வி சேவை ஊழியர்களின் கூட்டுறவு சிக்கன கடனுதவிச் சங்கத்தின் சப்ரகமுவ மாகாண பணிப்பாளர் எம்.டி.சரத் குணவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X