2021 மே 08, சனிக்கிழமை

மரை இறைச்சியை விற்க முயன்றவருக்கு பிணை

Niroshini   / 2016 ஜூலை 22 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆ.ரமேஸ், எஸ்.கணேசன், எஸ்.சுஜிதா, கு.புஷ்பராஜ்

கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தப்பளை - கோட்லோஜ் பகுதியில் மரை இறைச்சியை விற்பனை செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அதே தோட்டத்தைச் சேர்ந்த எம். அரிச்சந்திரனை, நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான் ருவான் டி சில்வா, நேற்று வியாழக்கிழமை, பத்தாயிரம் ரூபாய் ரொக்கப்பிணையில் விடுதலைச் செய்துள்ளார்.

குறித்த நபர், மரையொன்றை வேட்டையாடி, 2 கிலோகிராம் இறைச்சியை விற்பனை செய்ய முற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் புதன்கிழமை(20) மாலை, கந்தப்பளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமையவே குறித்த நபர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X