2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட எண்மர் கைது

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 25 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  கெசல்கமுவ ஓயாவுக்கு அருகில், சட்டவிரோதமாக   மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட எண்மரை பொகவந்தலாவை பொலிஸார் நேற்று (25)  கைது செய்துள்ளதுடன் அதற்காக பயன்படுத்திய  பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து, மேற்படி எண்மரும் நேற்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதானவர்கள் இரத்தினபுரி, நிவித்திகல மற்றும் பொகவந்தலாவையைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.  இவர்கள், பொகவந்தலாவ தெரேசியா தோட்டத்தை அண்மித்த பகுதிகளிலும் பல  நாட்களாக இவ்வாறு சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.

கைதானவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .