2021 மே 06, வியாழக்கிழமை

முன்பள்ளி மாணவர்களின் திறமையை வளர்க்க செயற்றிட்டங்கள்

Gavitha   / 2016 ஜூலை 23 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு.புஸ்பராஜ்

மலையக பகுதிகளில் பிரிடோ நிறுவனத்தின் ஊடாக 195க்கும் மேற்பட்ட முன்பள்ளிகள் இயங்கிவருகின்றன. சுமார் 03 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் தங்களது ஆரம்ப கல்வியை தொடர்கின்றனர்.

இச்சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில், பிரிடோ நிறுவனம் பல்வேறுப்பட்ட செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

நிறுவன தலைவர் மைக்கல் ஜோக்கிம், வெளிக்கள இணைப்பாளர் எஸ். கே. சந்திரசேகரன் ஆகிய இருவரின் ஆலோசனையின் பேரில், பொகவந்தலாவ பிரதேசத்தில் முன்பள்ளியில் கல்வி கற்கும் சிறுவர்களுக்கு கடந்த வாரம் ஆங்கில அறிவுப் போட்டி நிகழ்ச்சியொன்று நடத்தப்பட்டதுடன் சிறுவர்களுக்கான பாராட்டு விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும், அக்கரபத்தனை, தலவாக்கலை, லிந்துலை, நானுஓயா, டயகம ஆகிய பிரதேசங்களில் இயங்கும் முன்பள்ளி மாணவர்கள் மத்தியில், சித்திரம் வரையூம் திறனை அதிகரிக்கும் பொருட்டு சித்திரபோட்டிகளும் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில் கலந்து கொண்ட முன்பள்ளி சிறுவர்கள், தங்களின் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர். இப்போட்டிகள் தொடர்பாக நிறுவனத்தின் வெளிக்கள இணைப்பாளர் சந்திரசேகரன் தெரிவிக்கையில்,

'மலையக சிறுவர்கள் மத்தியில் அதிகமான திறமைகள் காணப்படுகின்றன. அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் பட்சத்தில் அவர்களின் திறமைகளை வெளிக்காட்ட இது வாய்ப்பாக அமையும். இதனை கருத்தில் கொண்டு எமது நிறுவனம் பல்வேறுப்பட்ட செயல்பாடுகளை நடைமுறைப்படுத்துகின்றது.  முன்பள்ளி ஆசிரியர்களுக்கு விசேட பயிற்ச்சிகளும் வழங்கபடுவதால், முன்பள்ளி ஆசிரியர்கள் ஊடாக எதிர்காலத்தில் மலையக கல்வியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்' என்று அவர் குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .