2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ரயில் கடவை காவலாளி ரயிலில் மோதுண்டு பலி

Editorial   / 2019 நவம்பர் 20 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ரஞ்சித் ராஜபக்‌ஷ

கொழும்புக் கோட்டையிலிருந்து பதுளை வரை பயணித்த பொடி மெனிக்கே ரயிலில் மோதுண்டு, ரயில் கடவை காவலாளி ஒருவர் இன்று (20) உயிரிழந்துள்ளார்.

ஹட்டன்- மல்லியப்பு சந்திக்கருகிலுள்ள ரயில் கடவையில் கடமையாற்றிய, 47 வயதுடைய எஸ். மோகன் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பொடி மெனிக்கே ரயில் வரும் போது, ரயில் கடவையை மூடச் சென்ற இவர், ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளாரென்றும் இவரது வீடும் குறித்த ரயில் கடவைக்கு அருகில் இருப்பதால், ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளாரா? அல்லது தற்கொலை செய்துக்கொண்டுள்ளாரா என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக  ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .