2021 மே 06, வியாழக்கிழமை

வயோதிபரை காணவில்லை

Sudharshini   / 2015 செப்டெம்பர் 29 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு.புஸ்பராஜ், ஆ.ரமேஷ்

மஸ்கெலியா பெயார்லோன் சாமிமலையைச் சேர்ந்த  லெட்சுமணன் காளிமுத்து(வயது 56), என்பவரை கடந்த 21 ஆம் திகதியிலிருந்து காணவில்லை என அவரது குடும்பத்தினர் மஸ்கெலியா பொலிஸில் முறையிட்டுள்ளனர்.

டிக்கோயா  வைத்தியசாலைக்கு கிளினிக் சென்றவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கும்படி கூறினர். இதன்படி அவர் அன்றைய தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள்   வைத்தியசாலைக்குச் சென்று பார்க்கும்போது அவரைக் காணவில்லை.

குறித்து வைத்தியசாலையில் விசாரித்த போது, அவரைக் காணவில்லை என்று வைத்தியசாலை நிர்வாகம் கூறியது.  இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக அவரது குடும்பத்தினர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

இவர், தொடர்பான தகவல்கள் தெரிந்தால் பொலிஸ் நிலையத்திலோ அல்லது 0757476162, 0527913193 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ தொடர்பு கொண்டு அறியத்தருமாறு  உறவினர்கள் கோரியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .