2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

ஹட்டனில் நூறு மாணவர்களுக்கு சான்றிதழ்கள்

Editorial   / 2020 மார்ச் 07 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹட்டன் கே.சுந்தரலிங்கம்)

ஹட்டன் கல்வி கணணி வள நிலையத்தில் தொழிற்பயிசி கணனி பாடநெறி பயின்ற சுமார் 100 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஹட்டன் வலயக் கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தலைமையில் நேற்று (06) ஹட்டன் கல்வி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

க.பொ.த. சாதாரண தரம், உயர்தரம் பரீட்சைக்கு தோற்றி பெறுபேறுகளுக்காகக் காத்திருக்கும் மாணவர்களே இந்தப் பயிற்சி நெறியில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த பாடநெறி மூலம் நாளை தொழிற் சந்தைக்கு தேவையான அடிப்படை அறிவை இம்மாணவர்கள் பெற்றுக்கொண்டுள்ளதுடன், இப்பாடநெறிக்காக இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் அங்கிகரிக்கப்பட்ட சான்றிதழும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஹட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் கலந்து கொண்டிருந்ததோடு, இந்நிகழ்வின்போது தகவல் தொடர்பாடல் தொடர்பாக தேடல் என்ற நூல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .