Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 நவம்பர் 24 , மு.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
கண்டி உதவி இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடத்தப்படும் ஹிந்தி மொழி பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தக்சீன் பாரதீய ஹிந்தி பிரசார சபையால் நடத்தப்படும் மேற்படி பரீட்சை 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14,15ஆம் திகதிகளில் இடம்பெறுமெனவும் இதற்கான கட்டண விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்தனர்.
பிரதாமிக் பரீட்சை- 350 ரூபாய், மத்யம பரீட்சை- 450 ரூபாய், ராஸ்திர பாஷா பரீட்சை -550 ரூபாய், பிரவேசிகா பரீட்சை -850 ரூபாய், விசாரத் பூர்விதா பரீட்சை- 950 ரூபாய், விசாரத அட்ராதி- 650ரூபாய், பிரவீன் பூர்வத்- 1050 ரூபாய், பிரவீன் அட்ராதி- 750 ரூபாய் என உதவி இந்தியத் தூதுவராலயம் அறிவித்துள்ளது.
தனியார் விண்ணப்பதாரிகள் மேலதிகமாக 1000 ரூபாய் செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டுமெனவும் மேலதிக விபரங்களுக்கு -081-2222652 அல்லது 081-2223786 என்ற அலைப்பேசி இலக்கங்களுக்கூடாக தொடர்புகொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago