2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

’1,000 ரூபாயைக் காட்டி பிரச்சினைகளை மறைத்துவிடாதீர்’

Editorial   / 2020 ஜனவரி 09 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

 

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு பெற்றுக்கொடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளதை வரவேற்பதாக தெரிவிக்கும் வேலுகுமார் எம்.பி, 1000 ரூபாவை காண்பித்து மற்றை பிரச்சினைகளை மறைத்து விட வேண்டாமெனவும் கோரிக்வை விடுத்தார். 

நாடாளுமன்றத்தில் ​நேற்று (08) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் அக்கிராசன உரை மீதான விவாத்தில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், 

மேற்படி தேர்தல் பிரகடதனத்தில் குறிப்பிட்டுள்ளவாறு 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பை தோட்ட தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமெனவும், அப்படிப் பெற்றுகொடுக்கப்படுமாயின் அதனை வரவேற்பதாகவும் தெரிவித்தார். 

மேலும் தோட்ட தொழிலாளர்களின் நலன் கருதி நல்லாட்சி அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட  திட்டங்களை நீக்கிவிட வேண்டாமென கோரிக்கை விடுத்த அவர்,  லயன் அரைகளிலிருந்து விடுபட்டு தோட்ட தொழிலாளர்கள் வாழ வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்ட  வீடமைப்பு திட்டங்கள் தொடர்பாக எந்த தவலும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தார். 

தனி வீட்டுத் திட்டம் நாட்டில் அங்கிகரிக்கப்பட்ட ஒரு திட்டமாக காணப்படுவாதாகவும், அந்த திட்டத்தை தடுத்து நிறுத்தி அதற்கு பதிலாக வேறு ஒரு செயற்பாட்டை நடைமுறைப்படுத்த முயல்வதை எதிர்ப்பதாகவும் தெரிவித்தார். 

அத்துடன் நல்லாட்சி அரசாங்கத்தால் செய்யப்பட்ட பிரேதச சபையின் அதிகரிப்பு உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென கோரிய அவர், 1000 ரூபா விவகாரத்தை மாத்திரம் முன்நிறுத்தி மலையக சமூகத்தின் மற்றைய பிரச்சினைகளை மறைத்துவிட வேணடாம் எனவும் கோரிக்கை விடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .