Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 26 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சந்துன் ஏ.ஜயசேகர)
மேல் கொத்மலை நீர்மின் செயற்றிட்டத்திற்காக அமைக்கப்பட்ட 13 கிலோமீற்றர் சுரங்கத்தின் அகழ்வு வேலைகள் பூர்த்தியடைந்து விட்டதாக பொறியிலாளர்கள் தெரிவித்தனர்.
இந்த சுரங்கம் தலாவாக்கலையிலிருந்து நியம்கம்தொற என்னுமிடத்தில் அமைந்துள்ள நீர்மின் உற்பத்தியாக்கி வரை நீரை எடுத்துச் செல்லும்.
இதுவே இலங்கையில் அமைக்கப்பட்ட மிக நீளமான சுரங்கம் என்பது குறிப்பிடக் கூடியதொரு விடயமாகும். மேல் கொத்மலை நீர்மின் திட்டம் 40 பில்லியன் ரூபா முதலீட்டில் அமைக்கப்படுகின்றது. இது 150 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். இது இன்னும் ஒரு வருட காலத்தில் செயற்படத் தொடங்கும்.
இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் கொத்மலை மின் நிலையத்திற்கு அனுப்பப்படும் என இத்திட்டத்தின் பணிப்பாளர் சவீந்திராத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் சமூக சூழல் தொடர்பான பல நண்மைகளை உண்டாக்கும். மேலும் தலவாக்கலை பூண்டுலோயா கொத்மலை பிரதேசங்கள் இந்த நீர்த்தேக்கத்தினால் நன்மையடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
46 minute ago
53 minute ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
53 minute ago
2 hours ago
6 hours ago