2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை

மின்சாரம் பெற்றுக்கொள்ளாத கிராமங்களுக்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை

Kogilavani   / 2010 ஒக்டோபர் 21 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

மத்திய மாகாண சபைக்குட்பட்ட கிராமங்களில் இதுவரை மின்சார வசதியை பெற்றுக்கொள்ளாத கிராமங்களுக்கு 2012 ஆம் ஆண்டு முடிவடைவதற்கு முன் மின்சாரத்தை பெற்றுக்கொடுப்பதற்கான திட்டம் ஒன்றினை மத்திய மாகான சபை, அரசுடன் இணைந்து நடைமுறை படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் மின்சார வசதிகளை பெற்றுக்கொள்ளாத கிராமங்கள் குறித்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பிரதான மின் திட்டங்களிலிருந்து மின்சாரத்தை பெற்றுக்கொள்ள முடியாத கிராமங்களுக்கு மாற்றுத் திட்டங்கள் மூலம் மின்சாரத்தை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சபை மேலும் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--