2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

பௌத்த மதத்திலுள்ள நடைமுறை கஷ்டமே அதன் வீழ்ச்சிக்கு காரணம்: எஸ்.பி.

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 22 , பி.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

பௌத்த மதத்தை கடைபிடிப்பதில் உள்ள கடினமான நிலைமை காரணமாக உலகில் முதலாம் இடத்திலிருந்த பௌத்த மதம் தற்போது நான்காவது இடம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை கண்டி பூஜாப்பிட்டிய பிரதேசத்தில் விகாரையொன்றுக்கு அடிக்கல் நாட்டும் விழா ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு மேலும் உரையாற்றிய அமைச்சர்...

தற்போது உலகம் வேகமாக முன்னேறிக்கொண்டு வருகிறது. 1964ஆம் ஆண்டில் 'இன்னும் 25 வருடங்களில் தீப்பெட்டி போன்ற கருவி ஒன்றின் மூலம் உலகிற்கே பேச முடியும்' என்று ஆதர் சீ கிளாக் கூறியபோது, அவர் பைத்தியக்காரர் என்று அப்போது பாடசாலை மாணவர்களான நாங்கள் கூறினோம். ஆனால் இன்று அது உண்மையாகிவிட்டது.

அன்று உலகில் முதலிடத்தில் இருந்தது பௌத்த மதம். இருந்தபோதும் தற்போது நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அதற்கு காரணம் பௌத்த மதத்தில் நடைமுறையிலுள்ள கஷ்டமாகும்.

உலகில் ஐந்தாவது மிகப்பெரிய சனத்தொகையுடைய நாடான இந்தோநேசியா ஒரு பௌத்த நாடு. ஆனால் அவர்களுடைய தொழில் மீன்பிடி தொழிலாகும். பௌத்த மதத்துக்கும் மீன்பிடி தொழிலுக்கும் முறணாவதால், முழு இந்தோனேசியாவும் இஸ்லாம் மதத்தை ஏற்றது. மாலைதீவும் அப்படியே மதம் மாறியது.

உலகில் 190 கோடி மக்கள் கிரிஸ்தவர்களாவார்கள். 120 கோடி பேர் முஸ்லிம்களும் 90 கோடி பேர் இந்துக்களும் ஆவார்கள். ஆனாலும் பௌத்த சனத்தொகை 35 கோடி பேர்களே ஆவார்கள் என்றும் அமைச்சர் இங்கு கூறினார்.

மத விவகார பிரதி அமைச்சர் எம்.கே.டீ.எஸ்.குணவர்தன உட்பட பலரும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.


  Comments - 0

 • xlntgson Wednesday, 03 November 2010 09:29 PM

  பிரதமர் திமு ஜெயரட்ன மீண்டும் இந்த பிரச்சினையை கிளப்பி இருக்கின்றார்.
  அதற்கு இந்து கோயில்களிலிருந்து அனுமதி கிடைத்ததைப் போன்ற செய்திப் படமும் வந்திருக்கின்றது.
  ஆனால், ரிக் யசுர் சாம அதர்வண என்னும் இந்து மூல கிரந்தங்களில் மிருக பலி காணப்படுகிறது.
  கொன்று குவிக்கவேண்டும் என்பதல்ல நோக்கம் மிருகங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டால் அதனால் தொல்லை துன்பம் அவை முறையாக குறைக்கப்படுதலும் உறுதிப்படுத்தப்படுகிறது. மேலும் யாரும் வனவிலங்குகளை பலி இட்டதாக தெரியவில்லை, விவசாயம் ஓங்குகிறது என்பதே தெய்வத்துக்கு நன்றி!

  Reply : 0       0

  xlntgson Saturday, 23 October 2010 08:49 PM

  கட்சி மாறி கட்சி மாறி இவருக்கு மத விவகாரம் கூட விளங்கவில்லை போலும், எந்த பௌத்தர் மீன் உணவாக கொள்ளாமல் இருக்கின்றார்?
  இறைச்சியை கூட அவர்கள் விட்டது மாதிரி தெரியவில்லை. சீனாவில் உணவுப்பிரச்சினை அவ்வளவு மோசமில்லையாம் .ஏனென்றால் அவர்கள் எதையும் தின்று வாழ்வதனால்!
  இந்தியாவில் சைவ உணவு தேடுவதனால் தான் உணவுப்பஞ்சமாம். ஆகையினால் ஐ நா பாதுகாப்புக் குழுவில் இந்தியா அதிக வாக்குகளில் வென்றமையை மது அருந்தியும் சீன உணவு அருந்தியும் இந்தியர்கள் கொண்டாடினராம்.
  காந்திக்கு ஜே!
  சீன பௌத்தம். பௌத்தம் அல்லவா, அமைச்சரே?

  Reply : 0       0

  jeyarajah Sunday, 24 October 2010 11:49 AM

  எஸ் பி திசநாயக்கா பௌத்தம் பற்றி பேசினால் அம் மதம்...........

  Reply : 0       0

  xlntgson Sunday, 24 October 2010 08:53 PM

  யானைக்கு பிடிக்கும் மதமா?
  இப்போது அவர் யானை அல்ல!
  வெற்றிலையில் சேர்ந்து விட்டார் . வெற்றிலைபோட்டால் மதம் ஏறாது மதமதப்புத்தான் ஏறும் கொஞ்சம் புகையிலையும் போட்டுக்கொள்ளவேண்டும். புற்று நோய் வர!
  'கொட்டப்பாக்கும் கொழுந்து வெற்றிலையும் போட்டாத்தான் சிவக்கும்; மச்சான் நீயும் மச்சினி நானும் போட்டா தூள் பறக்கும்; வெற்றிலை பாக்கு சிவக்க சுண்ணாம்பு வேண்டும் நீயும் சிவக்க மாப்பிள்ளை வேண்டும்' அப்படி ஒரு சுதியான பாட்டோடு ஆட்டமும் வேண்டும். அமைச்சர் நன்னீர் மீன் வளர்ப்பு பற்றி பேசுகிறாரோ தெரியாது. அதை வளர்த்தா?

  Reply : 0       0

  xlntgson Monday, 25 October 2010 09:43 PM

  நன்நீர்மீன் வளர்ப்புக்கு டெங்கு எதிரி!
  நீர்நிலைகளை எல்லாம் அழித்துவிட்டால் எப்படி மீன்வளர்க்க இயலும்?
  நுளம்பு எல்லாம், நோய் பரப்புவதில்லை, ஒருவகையான நுளம்பு நீண்ட உறிஞ்சுகுழல் (proboscis) கொண்டது அது நுளம்பையே தின்னும் தட்டான் அல்லது தும்பியைப்போல!
  நன்நீர்மீனை வளர்ப்பவர்களையும் உண்பவர்களையும் ஏழைகள் குறைந்த ஜாதியினர் என்று வகைப்படுத்தினால் இது பௌத்தர்களுக்கு மட்டும் அல்ல எல்லா மதத்தவர்களுக்கும் பொதுவானதாகும்.
  விருந்துக்கு இல்லாவிட்டால் ரகசியமாக ஆக்கி சாப்பிடவோ? சிறுநீரகநோய், குளத்துமீனால் வருமா?

  Reply : 0       0

  xlntgson Wednesday, 27 October 2010 09:10 PM

  இன்னொரு விடயத்தையும் அமைச்சருக்கு ஆதரவாக குறிப்பிட வேண்டும். பெளத்தபிக்குகள், வீடுகளில் ஆடு மாடு கோழி வளர்ப்பை எதிர்த்து வருகின்றனர்.
  சாப்பிட இயலுமென்றால் ஏன் வளர்க்கக்கூடாது? என்றாலும் பண்ணைகளில் வளர்ப்பவற்றையோ காடுகளில் வேட்டையாடப்பட்டவற்றையோ தின்னவேண்டியது வருமே என்றாலும் முறையான பதில்இல்லை!
  பண்ணை வளர்ப்பில் கிடைக்கும் கால்நடைகள் தரமானவை அல்ல. ஆகவே அண்டை அயலில் வாழும் ஏனைய மதத்தினர் கால்நடைகளை வளர்ப்பதை கேலி செய்யாமலும் இடைஞ்சல் விளைவிக்காமலும் இருந்தால் போதுமானதாக இருக்கலாம். அமைச்சரின் இலக்குக்கு!

  Reply : 0       0

  xlntgson Friday, 29 October 2010 09:12 PM

  இனங்களிடையே நல்லுறவு பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த விநோதத்தில் தான் வளர்ந்து இருக்கின்றது. தாங்கள் கொல்லவில்லை என்ற நிம்மதியில் ஏனைய இனத்தவரின் அறுத்துபலியிட்ட இறைச்சியை பௌத்தர்கள் உணவாகக் கொண்டிருக்கின்றனர்.
  சுதந்திரத்தின் பின் இறைச்சியை மீனை தருவிப்பது அவரது பொருளாதார முன்னேற்றம் இதனால் என்ற எண்ணமும் தருவிப்பவை தரமானவை என்ற தவறான கொள்கையும் ஆகும். வளர்த்து கொல்வதா என்பது கொள்கையளவில் நன்மையாக தோன்றினாலும் இராணுவத்துக்கு பிள்ளைகளை கொடுப்பது எவ்வாறான செயல்?
  உயிர் தியாகம் மிருகங்களுக்கு இல்லாமல் இல்லை

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .