Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 நவம்பர் 11 , மு.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
இரும்பு உருள் கதவில் அகப்பட்டு பரிதாபகரமாக பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவமொன்று இன்று வியாழக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் கொட்டகலை ரொசிட்டா நகரில் இடம் பெற்றுள்ளது. உயிரிழந்தவர் 52 வயதுடைய கந்தசாமிப்பிள்ளை பரமேஸ்வரி என தெரியவருகிறது.
கொட்டகலை ரொசிட்டா பஜாரிலுள்ள வீடொன்றின் முன்பக்க கதவு இரும்பினால் செய்யப்பட்டதாகும். இந்த வீட்டிற்கு கொழும்பிலிருந்து வந்த உறவினர்கள் மீண்டும் செல்வதற்காக வீட்டின் கதவினை திறந்து விட்டு, உறவினர்கள் சென்ற பிறகு கதவினை கீழே இழுத்து குனிந்து செல்ல முற்பட்டபோது, வேகமாக கீழிறங்கிய இரும்பு கதவு இந்தப் பெண்ணின் கழுத்துப்பகுதியில் தாக்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திலேயே அப்பெண் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தை அறிந்தவர்கள் பத்தனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். தற்போது இறந்தவரின் சடலம் நுவரெலியா மாவட்ட நீதிவானின் வருகைக்காக அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்தச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
2 hours ago
3 hours ago
19 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
19 Oct 2025