2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

சீகிரியா சென்ற தாயும் குழந்தையும் மர்மமான முறையில் காணவில்லை

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 21 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹாமட் ஆஸிக்)

பாதுக்க, மீபே பகுதியை சேர்ந்த  28 வயது குடும்பப் பெண்ணும் அவரது ஆறுமாதக் கைக் குழந்தையும் சீகிரியா குன்றுக்கு சென்ற சமயம் நேற்று மாலை மர்மமான முறையில் காணமல் போயுள்ளதாக சீகிரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று குடும்பத்தாருடன் சீகிரியாவிற்குச் சென்ற இவர்கள் சீகிரியா குன்றின் இடை நடுவிலுள்ள சிங்க வாயலில் மேற்படி தாயையும் கைக் குழந்தையையும் நிறுத்தி விட்டுச் சென்றதாகவும் மீண்டும் வந்து பார்த்தபோது அவர்களைக் காணவில்லை என்றும் முறைப்பாடு செய்யப் பட்டுள்ளது.

அவர்களைத் தேடும் நடவடிக்கை தொடரப்பட்ட போதும் இன்று மாலை வரையில் அவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என சீகிரியா பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--