Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஜனவரி 17 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட தலவாக்கலை கொத்மலை ஓயா ஆற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலமொன்று இன்று பிற்பகல் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அக்கரப்பத்தனை, ஆட்லோ தோட்டத்தைச் சேர்ந்த செபஸ்டியன் ஞானசுந்தரி (வயது 55) என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட பெண் தனது உறவினர்களுடன் இன்று காலை அக்கரப்பத்தனையிலிருந்து தலவாக்கலைக்குச் செல்வதற்காக பஸ் ஒன்றில் வந்துகொண்டிருந்துள்ளார். லிந்துலை நகரில் பஸ் நிறுத்தப்படவே உறவினர்களுக்குத் தெரியாமல் பஸ்ஸை விட்டு அந்தப்பெண் இறங்கியுள்ளார்.
மனநோயால் பாதிக்கப்பட்டவரென்று சந்தேகிக்கப்படுகின்ற இவர் லிந்துலை நகருக்கு அருகிலுள்ள கொத்மலை ஓயா ஆற்றோரத்துக்குச் சென்றிருந்த போது ஆற்றில் தவறி விழுந்திருக்கலாமென்று லிந்துலை பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்தச்சம்பவம் தொடர்பான விசாரணைகளில் லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
37 minute ago
42 minute ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
42 minute ago
4 hours ago
6 hours ago