2025 ஜூலை 07, திங்கட்கிழமை

உள்ளூராட்சி மன்றங்கங்களும் மலையக பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவமும்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 23 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனம் பெருந்தோட்டத்துறை சமூக மாமன்றத்துடன் இணைந்து 'உள்ளூராட்சி மன்றங்கங்களும் மலையகப் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவமும்' என்ற தொனிப்பொருளில் ஹட்டன் 'டைன் என் ரெஸ்ட்' கேட்போர் கூடத்தில் நேற்று 22 ஆம் திகதி விழிப்புணர்வு செயலமர்வொன்றினை நடத்தியது.

இந்தச்செயலமர்வின் போது எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தல்களுக்கான முனைப்புகள் தற்போது மலையகத்திலும் சூடுபிடித்துள்ள  இந்த வேளையில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் வேட்பாளர் பட்டியல்களில் பெண்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த செயலமர்வில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.  

இதில் மலையக தொழிற்சங்கப் பிரதிநிதிகள், சிவில் அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .