2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

பொகவந்தலாவை தோட்ட மோறார் மேற்பிரிவு தோட்டத்தில் முன்பள்ளி இல்லை

Suganthini Ratnam   / 2011 மார்ச் 02 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

தோட்டப்பகுதி பெற்றோர்கள் மத்தியில் முன்பள்ளியின் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டுள்ளதால் தமது பிள்ளைகளுக்கு எவ்விகையிலும் முன்பள்ளிக்கல்வியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் பெற்றோர்கள் ஆர்வத்துடனுள்ளனர்.

இருப்பினும் தோட்டப்பகுதிகளில் முன்பள்ளிக்கூடங்கள் முறையாக இல்லாததால் தமது பிள்ளைகளுக்கு முன்பள்ளிக்கல்வியைப் பெற்றுக்கொடுப்பதில் பெற்றோர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர்.

தோட்டப்பகுதிகளில் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனம் முன்பள்ளிக்கூடங்களை நடத்துவதாக தெரிவிக்கின்றபோதும,; அது எவ்வகையிலும் சாத்தியப்படுவதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் பிரிடோ நிறுவனம் பெற்றோரின் ஒத்துழைப்புடன் நூற்றுக்கும் மேற்பட்ட முன்பள்ளிகளை தோட்டப்பகுதிகளில் நடத்தி வருகின்றது. இவ்வாறானதொரு நிலையில்  பொகவந்தலாவை மோறார் மேற்பிரிவு தோட்டத்தில் முன்பள்ளி கூடமொன்று இல்லாததால் இத்தோட்டத்தைச் சேர்ந்த மக்கள் இத்தோட்டத்திலுள்ள கோவிலொன்றின் ஒருபகுதியில் கூடாரமொன்றை அமைத்து சிரமங்களுக்கு மத்தியில் தமது பிள்ளைகளுக்கு முன்பள்ளிக்கல்வியை வழங்க வேண்டும் என்பதில் ஆர்வம் செலுத்துகின்றனர். முன்பள்ளிக்கூடமொன்று அமைப்பதற்காக தோட்ட நிருவாகம் இடமொன்றை ஒதுக்கியுள்ள போதும் அந்த இடத்தில் முன்பள்ளிக்கூடமொன்றினை அமைத்துக்கொடுப்பதற்கு மக்கள் பிரதிநிதிகள் முன்வரவில்லை என்பதால் இந்தத்தோட்டத்தைச்சேர்ந்த மக்கள்  அதிருப்தியடைந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--