Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 13 , மு.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
இந்த வருடத்திற்கான தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.
நுவரெலியா கந்தப்பளை பார்க் தோட்டத்தில் பாதை புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் பார்க் தோட்டத்தில் மைதானப் புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும்; நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இதனைக் கூறினார். அவர் அங்கு மேலும் கூறுகையில்,
இந்த வருடம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினூடாக எனக்கு ஒதுக்கப்பட்ட 50 இலட்சம் ரூபா பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து சமூக மற்றும் பௌதிக செயற்றிட்டங்களுக்கு நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வேலைத்திட்டங்களைப் பிரதேச செயலகங்களூடாக பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வேலைத்திட்டங்கள் பூரணப்படுத்தப்பட்டதன் பின்பு வெகு விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படும். பார்க் தோட்டத்திலுள்ள முஸ்லிம் பள்ளிவாசலுக்குச் செல்லும் பாதை வெகுவிரைவில் புனரமைக்கப்படவுள்ளது. கந்தப்பளை தோட்ட கரப்பந்தாட்ட மைதானத்தினையும் சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளேன் என்றார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் நுவரெலியா அமைப்பாளரும் நுவரெலியா பிரதேசசபை உறுப்பினருமான அப்துல் அஸீஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுகளில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எஸ்.ஸ்ரீதரன, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தொழிலாளர் கல்வி மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளர் அம்மாசி நல்லுசாமி, தொழிலாளர் தேசிய சங்கத்தின் உபதலைவரும் நுவரெலியா பிரதேசசபை உறுப்பினருமான பி.சிவானந்தன், தலவாக்கலை அமைப்பாளர் கிறே, கந்தப்பளை மாவட்டத் தலைவர் உதயசூரியன், இணைப்பாளர் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேவேளை, கந்தப்பளை யங் ஸ்டார் விளையாட்டுக்கழகம் கந்தப்பளை தோட்ட மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்த கரப்பந்தாட்ட இறுதிச் சுற்றுப்போட்டியில் பங்கு பற்றி வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களை வழங்குவதற்கான அனுசரணையையும் நாடாளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம் வழங்கியிருந்தார்.
5 hours ago
8 hours ago
9 hours ago
19 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
9 hours ago
19 Sep 2025