2021 ஜனவரி 23, சனிக்கிழமை

சபைக்குள் பாண்; ஆளும் தரப்பு கூச்சல்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 20 , பி.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

2013 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத்திட்டம் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் சூடுபிடித்துள்ள நிலையில் உள்ளுராட்சி மன்ற கூட்டங்களிலும் இந்த திட்டம் மீதான வாதப்பிரதிவாதங்கள் சூடுபிடித்துள்ளன.

இந்நிலையில் எல்பிட்டிய பிரதேச சபையின் நேற்றைய கூட்டத்திற்கு  ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் பாணுடன் வந்தமையினால் சபையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

இதன்போது சபையில் இருந்த ஆளும் தரப்பினர் கூச்சல் குழப்பம் செய்தனர். 2013ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு நாளொன்றுக்கு 25 ரூபா மாத்திரமே சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த சம்பள அதிகரிப்பில் பாண் கூட சாப்பிட முடியாது என்று கூறி பாணை தூக்கிப்பிடித்து கிண்டல் செய்தனர் இதனால் சபையில் சலசலப்பு ஏற்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .