2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

தண்டவாள இரும்புகளை திருடிய ஒருவர் கைது

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 07 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.கிஷாந்தன்
 
உடரட புகையிரத பாதையில் ஹட்டனிலிருந்து கொட்டகலைக்கு அண்மித்த புகையிரத தண்டவாளத்தில் இருக்கும் இரும்புகளை திருடிய ஒருவரை நேற்று (06) ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். 
 
பல நாட்களாக சந்தேகநபர் தண்டவாள இரும்புகளை திருடி வந்துள்ளார். இதற்கமைய ஹட்டன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்று குறித்த நபரை கைது செய்துள்ளனர். 
 
குறித்த நபர், பல நாட்களாக தண்டவாள இரும்புகளை திருடி விற்பனை செய்து வந்துள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு தண்டவாள இரும்புகளை கழற்றினால் புகையிரதம் தடம்பிரண்டுவதற்கு பாதகமாக அமையும் என ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 
 
கைதுசெய்த நபரை நேற்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின், ஹட்டன் நீதவான் அமில ஆரியசேன குறித்த நபரை எதிர்வரும் 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்திரவிட்டுள்ளார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .