Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 டிசெம்பர் 21 , பி.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
நுவரெலியா கந்தப்பளையைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள், கடந்த 13 நாட்களாக முன்னெடுத்து வந்த பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம், நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து முடிவுக்கு வந்தது.
நுவரெலியா, கந்தப்பளை - உடபுஸ்ஸல்லாவ பெருந்தோட்டக் கம்பனிக்குச் சொந்தமான கந்தப்பளை பாக்குத் தோட்டம், தேயிலை மலைப் பிரிவு, சந்திரகாந்திப் பிரிவு ஆகிய மூன்று பிரிவுகளைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள், சம்பளம் குறைக்கப்பட்டமை மற்றும் தோட்ட அதிகாரியின் மிலேச்சத்தனமான போக்கை கண்டித்து, கடந்த 13 நாட்களாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தப் பணிப்பகிஷ்கரிப்பை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், நுவரெலியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தொழில் ஆணையாளர் காரியாலயத்தில், நேற்று (21) பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்தப் பேச்சுவார்த்தையில், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசியத் தோட்ட தொழிலாளர் சங்கத்தின் செயலாளருமான வடிவேல் சுரேஷ், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இக்கலந்துரையாடலில், தோட்ட அதிகாரி இடமாற்றம் பெற்றுச் செல்லும்வரை, தோட்டத் தொழிலாளர்களின் விடயத்தில் தலையிட முடியாது எனவும், தோட்டத் தொழிலாளர்களது நலன்சார் விடயங்களை, தோட்ட நிறைவேற்றுப் பணிப்பாளர், உதவி அதிகாரி ஆகியோர் முன்னெடுப்பர் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், இவ்விடயம் தொடர்பில் மற்றுமொரு பேச்சுவார்த்தையை, கொழும்பில் நடத்துவதென்றும், தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்கு திரும்ப வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .