2021 ஜனவரி 15, வெள்ளிக்கிழமை

205 மில்லியன் ரூபா பெறுமதியான தொழிற் பயிற்சி உபகரணங்கள் கையளிப்பு

Super User   / 2012 நவம்பர் 18 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.தியாகு)


நுவரெலியா மாவட்ட தொழிற் பயிற்சி நிலையத்திற்கான உபகரணங்கள்  இன்று ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டன.

இந்திய அரசாங்கத்தின் சுமார் 205 மில்லியன் ரூபா நிதியுதவியின் கீழ  நுவரெலியா மாவட்ட தொழில் பயிற்சி நிலையத்திற்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்த உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வில் இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும, நாடாளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தா மற்றும் கண்டியிலுள்ள இந்திய துணை உயர் ஸ்தானிகர் ஏ.நடராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, நுவரெலியா மாவட்ட தொழிற் பயிற்சி நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடமும் திறந்துவைக்கப்பட்டது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .