2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

பேராதனை பல்கலை மாணவர்கள் 37பேர் மீது குளவிக்கொட்டு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 17 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சீ.எம்.ரிஃபாத்

கண்டி, ஹந்தானை வனப் பகுதியில் குளவிக் கொட்டுக்கு உள்ளான பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 37  மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுமார் 250 மாணவர்கள் ஆய்வுக்காக ஹந்தானை வனப் பகுதிக்கு நேற்று புதன்கிழமை மாலை  சென்றபோதே, குளவிக் கொட்டுக்கு உள்ளாகியுள்ளதாக கண்டிப் பொலிஸார் தெரிவித்தனர். 

குளவிக் கொட்டுக்கு உள்ளான  37 மாணவர்களில் 36 பேர் பேராதனை போதனா வைத்தியசாலையிலும் ஒருவர் கண்டி பொது வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--