2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

565 மில்லிகிராம் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2011 மார்ச் 04 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (எஸ்.சுவர்ணஸ்ரீ)

565 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளை வைத்திருந்ததாக தெரிவிக்கப்படும் ஒருவரை ஹட்டன் பொலிஸார் நேற்று  வியாழக்கிழமை கைதுசெய்துள்ளனர்.

கொழும்பிலிருந்து ரயில் மூலம் ஹட்டனுக்கு வந்த குறித்த நபரை ஹட்டன் ரயில் நிலையத்தில் வைத்து சோதனைக்கு உட்படுத்தியபோதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அத்துடன், 20 சிறிய பைக்கற்றுக்களில் அடைக்கப்பட்டிருந்த ஹெரோய்ன் போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவரென்றும் அவரின் பயன்பாட்டுக்காகவே போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்ததாகவும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரிய வருகின்றது.
குறிப்பிட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக ஹட்டன் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--