Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 16 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எப்.எம்.தாஹிர்)
பண்டாரவளை ஊவா ஹைலண்ட் தோட்டத் தொழிலாளார்கள் 780பேர் சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை இன்று முதல் மேற்கொள்கின்றனர். வருடாந்தம் வழங்கப்படும் போனஸ் கொடுப்பனவை ஆறாயிரம் ரூபாவாக உயர்த்தக் கோரியே இப்போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
தற்போது 3,200 ரூபா வருடாந்த போனஸ் கொடுப்பணவு வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக இந்த 3,200 ரூபா கொடுப்பனவு போதுமானதல்ல என தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் சுமூகமான தீர்வு கிடைக்காத பட்சம் தொடர்ந்து வேலை நிறுத்தப்போராட்டத்தில் குதிக்கப்போவதாக அவர்கள் அச்சுறுத்தல் விடுக்கின்றனர்.
39 minute ago
43 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
43 minute ago
2 hours ago
2 hours ago