2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

இன்று மூன்றாம் கட்டப் பேச்சுவாரத்தை

Gavitha   / 2021 மார்ச் 01 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளந்த சம்பள அதிகரிப்பு தொடர்பான சம்பள நிர்ணய சபையின் மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை, இன்று (01) ப2 மணிக்கு, அமைச்சில் நடைபெறவுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டவில்லை என்றால், தொழில் ஆணையாளர், தனது முழு அதிகாரங்களைப் பிரயோகித்து சம்பள பிரச்சிணைக்குத் தீர்வை பெற்று, அதை வர்த்தமானியிட வேண்டும் என, தொழிற்சங்கம் தரப்பில் கலந்துகொள்ளும் எட்டு பிரதிநிகளும் அழுத்தம் கொடுக்கத் தீர்மானம் எடுத்துள்ளனர் எனத் தெரியவருகிறது.

இன்றைய பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவுள்ள தொழிற்சங்க பிரதநிதிகளில் ஒருவரான அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்க தலைவர் கிட்ணன் செல்வராஜ், இது தொடர்பாக இன்று (01) தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1040 ரூபாயை நாள் சம்பளமாக வழங்குவது தொடர்பாக, கடந்த 8ஆம் திகதி வாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்கப்பட்டது. எனினும் இதற்கு கம்பனிகள் மறுப்பு தெரிவித்திருந்தது. இருப்பினும், வாக்கெடுப்பு ஆட்சேபனைகளைத் தெரிவிக்க சம்பள நிர்ணைய சபை, கம்பனி, தொழிற்சங்கம் ஆகிய இரு தரப்பக்கும் கால அவகாசம் வழங்கியது.

இந்த காலப்பகுதியில், கம்பனிகள் தரப்பில், 162 ஆட்சேபனை மனுக்கள் கையளிக்கப்பட்டு, அது தொடர்பான பேச்சுவார்த்தை, கடந்த 19ஆம் திகதி நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையை, கம்பனிகள் புறக்கணித்திருந்தன.

இந்நிலையிலேயே, மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை, இன்று (01) நடைபெறவுள்ளது.

இதேவேளை, 2 மணிக்கு நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவுள்ள தொழிற்சங்கப் பிரதநிதநிதிகள் 1 மணியளவில் தனியாக் கூடவுள்ளனர் என்றும் இதில் எடுக்கப்படும் தீர்மானத்தின் அடிப்படையில், பேச்சுவார்த்தையில் தீர்மானங்கள் பற்றி தெரிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படகின்றது.

இருப்பினும், இன்றைய பேச்சுவார்த்தையில் கம்பனி தரப்பினர் கலந்து கொள்ள மறுக்கும் சந்தர்ப்பத்தில், எற்கெனவே முதல்கட்டப் பேச்சுவார்த்தையில் வாக்கெடுப்பில் தீர்மானிக்கப்பட்டவாறு, சம்பளம் தொடர்பில் தொழில் ஆணையாளரின் உத்தியோக பூர்வமாக பலத்தை பாவிக்க அழுத்தம் கொடுக்கவும், தொழிற்சங்கங்கள் தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X