2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

கொஸ்லாந்தையில் 36 குடும்பங்கள் வெளியேற்றம்

Kogilavani   / 2020 நவம்பர் 20 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பல பிரதேசங்களில் நீடித்துவரும் சீரற்ற வானிலை காரணமாக, பேரகல- கொஸ்லாந்தைப் பகுதியில், மண்மேட்டுடன் பாரிய கற்பாறைகள் சரியும்  அபாயம் நிலவுவதால் அப்பகுதியிலிருந்து 36 குடும்பங்களைச் சேர்ந்த 153 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று, ஹப்புத்தளை பிரதேச செயலாளர் சுனில் அபேகோன் தெரிவித்தார்.

மேற்படிக் குடும்பங்கள் வசித்துவரும் நான்கு லயன் குடியிருப்புகளின் மீது, பாரிய கற்பாறைகளுடன் மண்மேடும்  சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ள குடும்பங்கள், கல்கந்தை வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி குடும்பங்கள், மண்சரிவு ஏற்படக்கூடிய அதி அபாய வலயத்தில் வசிப்பதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் ஏற்கெனவே அறிவித்துள்ளதாகவும் இவர்களில் 16 குடும்பங்கள் ஏற்கெனவே பாதுகாப்பான இடமொன்றில் குடியமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

மீதமுள்ள குடும்பங்களையும் பாதுகாப்பான இடங்களில் நிரந்தரமாகக் குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .