2020 ஓகஸ்ட் 14, வெள்ளிக்கிழமை

தெளிவுபடுத்தும் கூட்டம்

Editorial   / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை தொடர்பாக, தொழிலாளர் தேசிய சங்கத்தின் அங்கத்தவர்களுக்குத் தெளிவுபடுத்தும் கலந்துரையாடல், நேற்று (09), ஹட்டன், மணிக்கவத்தை தோட்டத்தில் நடைபெற்றது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் டிக்கோயா பிரதேச மாவட்டத் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச்செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சோ. ஸ்ரீதரன் கலந்துகொண்டு, தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக தெளிவுபடுத்தினார்.

இந்நிகழ்வில், தொழிலாளர் தேசிய சங்கத்தின் டிக்கோயா பணிமனை உத்தியோகத்தர்களான சுரேஷ், சரிதா, உஷா உள்ளிட்ட தோட்டத் தலைவர்கள், தலைவிகளும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--