Kogilavani / 2021 ஏப்ரல் 07 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா, ஆர்.ரமேஸ்
கந்தப்பளை -நுவரெலியா, இராகாலை பிரதான வீதி, கொங்கோடியா தோட்டத்தில், இன்று (7) அதிகாலை இடம்பெற்ற விபத்தில், இருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஐபொரஸ்ட் பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கிச்சென்ற ஓட்டோ ஒன்று, 15 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் சாரதி உட்பட இருவரே காயமடைந்த நிலையில், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கமே இவ்விபத்துக்குக் காரணமென்று, பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்விபத்துத் தொடர்பில் கந்தப்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
38 minute ago
44 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
44 minute ago
50 minute ago