2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

ஆசிரியர்களுக்கான பரிசளிப்பு விழா

Suganthini Ratnam   / 2011 மார்ச் 04 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

2010ஆம் ஆண்டு சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மலையக ஆசிரியர் ஒன்றிய உறுப்பினர்களுக்கிடையில் நடத்தப்பட்ட  எழுத்தாக்கப் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா எதிர்வரும் 6ஆம் திகதி ஹட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியில் காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

சர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கிடையில்  கவிதை, கட்டுரை, சிறுகதை ஆகிய எழுத்தாக்கப் போட்டிகள் கடந்த ஆண்டின் இறுதிப்பகுதியில் நடத்தப்பபட்டன.

மேற்படி போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்றவர்களுக்கான இப்பரிசளிப்பு விழா பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரி உபபீடாதிபதி வி.செல்வராஜா தலைமையில் நடைபெறவுள்ளது.   இப்பரிசளிப்பு விழாவில் ஒன்றியத்தின் போசகரும் சட்டத்தரணியுமான எல்.ண்ஐக்திகுமார் 'மலையக இலக்கியங்களில் ஆசிரியர்களின் பங்கு'  என்ற தலைப்பில் சிறப்புரையாற்றவுள்ளார்.

வெற்றியாளர்களுக்கு பெறுமதியான பணப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. இவ்விழாவில் அனைத்து உறுப்பினர்களையும் கலந்து சிறப்பிக்குமாறு மலையக ஆசிரியர் ஒன்றியத்தின் தலைவர் ஆர்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X