2020 ஓகஸ்ட் 14, வெள்ளிக்கிழமை

9ஆம் திகதி பட்டமளிப்பு விழா

Editorial   / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இரா.யோகேசன்

பேராதனைப் பல்கலைகழகம்- தொலைக்கல்வி நிலையத்தின் வெளிவாரிக் கற்கைகளுக்கான பொதுப் பட்டமளிப்பு விழா, இம்மாதம் 9ஆம் திகதி, பொல்கொல்ல தேசிய கூட்டுறவு அபிவிருத்தி கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. 

இப்பட்டமளிப்பு விழாவில் பொதுக்கலைமானி பட்டத்துக்கு 443 பேரும் இணையத்தளம் மூலமான வியாபார வணிகக் கல்வி பட்டத்துக்கு 28 பேரும் தகுதிபெற்றுள்ள அதேவேளை, அவர்களுக்கான பட்டமளிப்பு செய்வதற்கு, பல்கலைகழகப் பேரவையும் அங்கிகாரம் வழங்கியுள்ளது. 

பட்டமளிப்பு விழாவுக்கு தகுதி பெற்றுள்ளோருக்கான அறிவுறுத்தல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அதேவேளை அவர்களுக்குரிய ஆசனப் பதிவிலக்கமும் மேலங்கியும், நேற்று முன்தினம் (30) முதல் தொடரூரு கல்வி நிலையத்தில் வழங்கப்பட்டு வருகின்ற அதேவேளை பட்டமளிப்பு விழாவுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் உதவிப் பதிவாளர் தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--