2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

இளைஞர் நாடாளுமன்றத்துக்கு பிரதி அமைச்சர்கள் தெரிவு

Editorial   / 2020 செப்டெம்பர் 16 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளாவிய ரீதியில் நடைபெற்ற இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில், பசறை பிரதேச செயலாளர் பிரிவில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பசறை தமிழ் தேசிய பாடசாலையின் உயர்தர வகுப்பு மாணவி யோகேஸ்வரன் யதுர்ஷிக்கா, இளைஞர் நாடாளுமன்றத்தின் அமைச்சுப் பதவிகளுக்காக இடம்பெற்ற நேர்முகத் தேர்வில் சித்திபெற்று வலு சக்தி பிரதியமைச்சராக நியமனம் பெற்றுள்ளார்.

இப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட இவரை, பாடசாலை அதிபர் உட்பட பாடசாலை சமூகம் வாழ்த்தி பாராட்டி மகிழ்கின்றது.       

இதேவேளை, லுணுகலை பிரதேச செயலாளர் பிரிவில் போட்டியிட்டு இளைஞர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவான செல்வன் இரம்மியன், ஆளுந் தரப்பு அமைப்பாளராகவும் உள்நாட்டு வர்த்தக மற்றும் நுகர்வோர் உரிமைகளுக்கான பிரதியமைச்சராகவும் தெரிவாகியுள்ளார்.

இவருக்கு லுணுகலை பிரதேச இளைஞர் கழகங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .