2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

மாணவர்களுக்கான வதிவிட யோகா பயிற்சி நெறி

Editorial   / 2020 மார்ச் 05 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ சண்முகநாதன்

மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் நடத்தும் இலவச வதிவிட வசதியுடன் கூடிய யோகா பயிற்சி நெறி, மத்துகம கலைமகள் தமிழ் மகா வித்தியாலயத்தில்,  நாளை மறுதினம்  (07) முதல் திங்கட்கிழமை வரை  நடைபெறவுள்ளதாக, மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் பல்கலைக்கழக விவகாரங்களுக்கானப் பொறுப்பாளர் வீ. ஏகாம்பரம் தெரிவித்துள்ளார்.

மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம்,  மிகவும் பின்தங்கிய பாடசாலைகளைத் தெரிவுசெய்து நடத்தி வரும், 6 ஆவது யோகா பயிற்சி நெறி முகாம் இதுவாகும்.

இந்தப் பயிற்சி நெறியில், களுத்துறை, மத்துகம, ஹொரணை ஆகிய  கல்வி வலயங்களைச் சேர்ந்த,  17 பாடசாலைகளிலிருந்து தலா 6 மாணவர்கள் வீதம் 102 மாணவர்கள் பங்குபற்றவுள்ளனர்.  

இவர்களுக்கான தங்குமிடம், உணவு முதலான சகல வசதிகளையும் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் பொறுப்பேற்றுள்ளது.

முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் மேற்படி பயிற்சி நெறியை, சர்வதேச ஜீவயோகா ஆசிரியர் சண்முகம் தனசேகர் குருஜி வழங்கவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .