Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 ஜூன் 08 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் மொழி மூலமான மேல்மாகாண பட்டதாரிகளின் முதல் தொகுதி ஆசிரியர் நியமனம் எதிர்வரும் 10ஆம் திகதி கொழும்பில் வழங்கப்படும்.
இந்நியமனங்களுக்காக விண்ணப்பித்தோருக்கு அசௌகரியங்கள் ஏற்பட்டிருப்பின், அவர்கள் உடனடியாக எமது பொதுச்செயலாளர் மேல்மாகாணசபை உறுப்பினர் கலாநிதி நல்லையா குமரகுருபரனை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
மேல்மாகாண தமிழ் மொழிமூல பட்டதாரி ஆசிரியர் நியமனம் தொடர்பில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக விண்ணப்பதாரிகள் பலர் தலைவர் மனோ கணேசனிடன் முறையிட்டிருந்தனர்.
இதுதொடர்பில் மேல்மாகாணசபை உறுப்பினர் நல்லையா குமரகுருபரன் உரிய நடவடிக்கைகளை எடுத்து, இதுதொடர்பான கல்வி பணிப்பாளர்களுடன் கலந்துரையாடியிருந்தார்.
தற்சமயம் முதல் தொகுதியாக 184 நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. இவை கொழும்பு கல்வி வலயத்திற்கு வெளியே அமைந்துள்ள வெற்றிடங்களுக்கு வழங்கப்படுகின்றன.
உரிய தகைமைகளும், ஆவணங்களும் கொண்டுள்ள அனைத்து விண்ணப்பதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
இதுதொடர்பில் அசௌகரியங்களை எதிர்கொள்ளும் விண்ணப்பதாரிகள் மேல்மாகாணசபை உறுப்பினர் நல்லையா குமரகுருபரனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago