2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

மேயரின் வாசஸ்தலத்திலிருந்து இம்தியாஸ் வெளியேறினார்

Super User   / 2010 நவம்பர் 18 , பி.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(யொஹான் பெரேரா)


கொழும்பு மாநகர முன்னாள் மேயர் உவைஸ் மொஹமட் இம்தியாஸ்,  மாநகர மேயருக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தைவிட்டு நேற்று வெளியேறியுள்ளார்.


சேர் மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தையிலுள்ள இந்த வாசஸ்தலத்திலிருந்து மொஹமட் இம்தியாஸ் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 2.30  மணியளவில் வெளியேறியதாக கொழும்பு மாநகர சபை வட்டாரங்கள் டெய்லி மிரருக்குத் தெரிவித்தன.
 

கொழும்பு மாநகர சபை கலைக்கப்பட்ட பின்னர், மேயரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இருந்தவாறே தனது முந்தைய தொழிலான முச்சக்கர வாகனம் ஓட்டும் தொழிலுக்கு மொஹமட் இம்தியாஸ் மீண்டும் திரும்பியிருந்தார்.


மேயரின் வாசஸ்தலத்திலிருந்து அவர் வெளியேற மறுத்ததால் கொழும்பு மாநகர சபை அந்த இல்லத்திற்கான நீர், மின்சார கட்டணங்கள் செலுத்துவதை நிறுத்தியிருந்தது.


மேயரின் இல்லத்திலிருந்து இம்தியாஸை வெளியேறுமாறு மாநகர சபை நிர்வாகம் கோரியிருந்த போதிலும்  அவர் 3 மாத அவகாசம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .