2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

அல் - ஹிக்மா கல்லூரியின் இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அமைச்சர் ஹக்கீம் முன்வருகை

Super User   / 2011 ஒக்டோபர் 19 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு - 12  அல் - ஹிக்மா கல்லூரியில் நிலவும் இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் குறித்த பாடசாலைக்கு அருகிலுள்ள 40 பேர்சர்ஸ் காணியை பெற்றுக்கொடுப்பதற்கு நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் முன்வந்துள்ளார்.

இது தொடர்பில் நீதி அமைச்சர் ஹக்கீம் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபகஷவுடன் பேச்சு நடத்தவுள்ளார்.

முஸ்லிம்கள் செறிந்து வாழும் வாழைத்தோட்டம் பிரதேசத்தில் அமைந்துள்ள அல் - ஹிக்மா கல்லூரியில் சுமார் 1,400 மாணவர்கள் வரை கல்வி கற்கின்ற இப்பாடசாலையில் இட நெருக்கடி காரணமாக மாணவர்கள் மற்றும் ஆசியர்களும் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் அதிக கவனம் செலுத்தி வரும் நீதி அமைச்சர் ஹக்கீம் கடந்த வெள்ளிக்கிழமை குறித்த காணியை நேரில் சென்று பார்வையிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X