2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

கொக்கெய்ன் விவகாரம் : அதிகாரிகள் மூவருக்கு இடமாற்றம்

Editorial   / 2017 ஜூலை 22 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்மலானை, பொருளாதார மத்திய நிலையத்தில், சீனிக் கொள்கலனிலிருந்து 218 கிலோ 600 கிராம் நிறையுடைய கொக்கெய்ன் போதைப்பொருள் மீட்கப்பட்ட விவகாரத்தையடுத்து, சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மூவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனரென, சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அந்தப் போதைப் பொருளின் பெறுமதி, 3.2 பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக இவ்விவகாரம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில், எழுவரைக் கைதுசெய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

அவர்களில், கொள்கலன் பாரவூர்தியின் சாரதி, உதவியாளர்கள் இருவர் மற்றும் பொருளாதார மத்திய நிலைய ஊழியர்கள் மூவரும் அடங்குகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .