2021 மே 08, சனிக்கிழமை

அப்பாவை விடுதலை செய்யுங்கள்:ஜனாதிபதியிடம் கோரிக்கை

Gavitha   / 2015 செப்டெம்பர் 30 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

'எங்கள் அப்பாவை கட்டியணைக்க ஆசையாகவுள்ளது, ஜனாதிபதி மாமா, எங்கள் அப்பாவை விடுதலை செய்யுங்கள்' என்ற கோஷத்துடன், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் பிள்ளைகள், யாழ்ப்பாணத்தில்  புதன்கிழமை (30) பேரணியொன்றை நடத்தினர்.

யாழ். மாவட்டச் செயலகம் முன்பாக ஆரம்பமாகிய இந்தப் பேரணி, முதலமைச்சர் அலுவலகம் வரைச் சென்றது. அதன்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்குமாறு கோரி மகஜர் ஒன்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டது.

இந்தப் பேரணியை வாழ்வின் ஒளியைத் தேடும் சிறுவர்களுக்கான ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X