2021 ஜனவரி 27, புதன்கிழமை

அமரர் சண்முகம் ஞானப்பிரகாசத்தின் நினைவுதின நிகழ்வு

Editorial   / 2019 நவம்பர் 23 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் ரவிசாந்

யாழ். மாவட்டச் சமூக அபிவிருத்தி மன்ற ஸ்தாபகரும் கூட்டுறவுத் துறையின் முன்னோடிகளில் ஒருவராகவும் திகழும் அமரர் சண்முகம் ஞானப்பிரகாசத்தின் 29ஆவது ஆண்டு நினைவு தின அஞ்சலியும் பயன்தரு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வும், யாழ். மாவட்டச் சமூக அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில், இன்று (23) முற்பகல் 10.30 மணிக்கு யாழ்., கந்தர்மடம் - அரசடி வீதியிலுள்ள காரியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

மேற்படி மன்றத்தின் தலைவர் பொ.சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஓய்வுநிலைக் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் பொ.சிவலிங்கம் பிரதம விருந்தினராகவும் யாழ். மாவட்டக் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் ச.சியாமளா சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.

அமரர் சண்முகம் ஞானப்பிரகாசத்தின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ஓய்வுநிலைக் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் சு. கணேஷ், அமரர் சண்முகம் ஞானப்பிரகாசம் தொடர்பான நினைவுப் பேருரையாற்றினார்.

விருந்தினர்களின் உரைகளைத் தொடர்ந்து இறுதியாக குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .