2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

அறிக்கைகள் மன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை

George   / 2016 மார்ச் 19 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த்

புங்குடுதீவு மாணவியின் கொலை தொடர்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய டி.என்.ஏ பரிசோதனை அறிக்கை மற்றும் சான்றுப் பொருட்களின் பகுப்பாய்வு அறிக்கைகள், நேற்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏம்.எம்.எம்.றியால் முன்னிலையில் விசாரணைக்கு வெள்ளிக்கிழமை (18) எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சந்தேகநபர்கள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி, 'ஊடகங்கள் செய்திகளை பொறுப்பாக வெளியிடவேண்டும். இந்தக் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களை, குற்றவாளிகள் என்ற ரீதியில் ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன. இதனைத் தடுக்க வேண்டும். சந்தேகநபர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு செய்திகளை வெளியிடவேண்டும்' என மன்றில் கூறினார்.

இதன் பின்னர் மேற்படி வழக்கை எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்தார


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .