Kogilavani / 2015 ஒக்டோபர் 02 , மு.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பருத்தித்துறைக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து வெள்ளிக்கிழமை (02) அதிகாலை 7 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதன்போது, மீனவர்களின் படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைதான மீனவர்களை கடற்படையினர் தங்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர்களை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
5 hours ago
9 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
18 Mar 2026