Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Princiya Dixci / 2016 ஜூலை 26 , மு.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செல்வநாயகம் கபிலன்
உடுவில் மேற்குப் பகுதியில் கடந்த 24ஆம் திகதி இளைஞன் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களை, நேற்றுத் திங்கட்கிழமை (25) கைதுசெய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
உடுவில் மேற்குப் பகுதியில் ஒன்றுகூடிய இளைஞர்கள் சிலர், அப்பகுதியினைச் சேர்ந்த இளைஞன் ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, தகராற்றில் ஈடுபட்டு இளைஞன் மீதும் வாள்வெட்;டை மேற்கொண்டுள்ளனர்.
இதில் எஸ்.தினேசன் (வயது 18) என்ற இளைஞன் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சுன்னாகம் குற்றத்தடுப்பு பொலிஸார், 4 சந்தேகநபர்களைக் கைதுசெய்துள்ளனர். அவர்களிடமிருந்து வாள் ஒன்றையும் மீட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Jul 2025