2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

எனது மகன் உயிருடன் உள்ளார்

Niroshini   / 2016 மார்ச் 26 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

கடந்த கால யுத்ததில் எனது இரண்டு பிள்ளைகளை பறிகொடுத்துவிட்டேன். மற்றய மகன் காணாமல் போய்விட்டார். என்னுடைய மகன் உயிருடன்தான்  இருக்கிறார். அவரை கண்டுபிடித்து தாருங்கள் பரணகம ஆணைக்குழுவிடம் தாய் உருக்கமான வேண்டுகோள்

இதுதொடர்பாக அந்த தாய் ஆனைக்குழு அதிகாரிகள் நீங்கள் உங்களுடைய மகன் உயிரோடு இருப்பாரென நம்புகிறீர்களா என வினவியபோது, எனது மன் உயிரோடுதான் இருக்கிறார் என உறுதியாக தெரிவித்தார்.

தொடர்ந்து இவரை நாங்கள் தொடர்ந்து தேடுவோம் அதுவரை உங்களுக்கு ஏதாவது உதவிகள் கொடுப்பனவுகள் செய்ய வேண்டுமா என வினவியதற்கு,  இல்லை நான் கொடுப்பனவை விரும்பவில்லை. எனக்கு பிள்ளைதான் வேண்டுமெனவும் தெரிவித்தார்.

பிள்ளை இருந்தால் உங்களுடன் தொடர்பை ஏற்ப்படுத்தியிருப்பார் என கூறியதற்கு, இல்லை அப்படியென்றில்லை, இப்ப எங்களுடன் தொடர்பு கொள்ளமுடியாத நிலையில் கூட அவரை வைத்திருக்கலாம். எனக்கு எந்த கொடுப்பனவும் தேவையில்லை. இரண்டு பிள்ளைகளை ஏற்கனவே பறிகொடுத்து விட்டேன். எனவே இந்த பிள்ளையை எப்பிடியாவது கண்டுபிடித்து என்னிடம் ஒப்படைக்குமாறு கோரினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .